பெண்கள் தொழில் செய்தல் தொடர்பான ஷரீஆவின் கண்ணோட்டம்
மனித சமூகத்தில் ஒரு பாதி ஆண் என்றால் மறு பாதி பெண்ணாவாள். ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளைப் போலவே இஸ்லாத்தில் பெண்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மாறாக பெண்ணிலைவாதம் (feminism) என்ற பெயரில் நவீனத்துவவாதிகள் கோஷம் எழுப்புவதைப் போல பெண்களை செயலிழக்கச் செய்து அவர்களை ஒதுக்கி வைக்கும் போக்கினை இஸ்லாம் கொண்டிருக்கவில்லை. பெண்களின் உரிமைகள் அனைத்தையும் அவர்களது உடற் கூறுகளுக்கும் இயல்புகளுக்கும் ஏற்ப அல்லாஹ் வழங்கியுள்ளான்.